12 ராசிகளுக்கும் இன்றைய பலன் வீடியோ · Today's horoscope, all 12 signs.
அசுவினி: வரவால் வளம் காணும் நாள். எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். பணவரவு திருப்தி தரும். பரணி: வியாபாரத்தில் லாபம் வரும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். வெளியூர் நபர்கள் நம்பிக்கையை அதிகரிப்பர். கார்த்திகை 1: நேற்றைய சங்கடம் நீங்கும். உற்சாகமுடன் செயல்படத் தொடங்குவீர். தொழில் போட்டியாளர் விலகுவர்.
கார்த்திகை 2,3,4: குழப்பத்திற்கு இடம் தராமல் செயல்பட வேண்டிய நாள். முயற்சி லாபத்தில் முடியும். ரோகிணி: குழப்பம் விலகி மனம் தெளிவடையும். சிறு வியாபாரிகள் கவனமுடன் செயல்படுவது நல்லது. மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் தோன்றிய பிரச்னை விலகும். வேலையில் ஏற்பட்ட தடை நீங்கும். பயணத்தில் நிதானம் அவசியம்.
மிருகசீரிடம் 3,4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். நினைத்ததை நடத்தி நன்மையைக் காண்பீர். திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். புனர்பூசம் 1,2,3: அலைச்சலும் செலவும் சங்கடப்படுத்தும். நெருக்கடிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்.
மகம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். பூரம்: கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர். பழைய பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்திரம் 1: கடந்த கால அனுபவம் கை கொடுக்கும். துணிச்சலாக ஒரு முடிவு எடுப்பீர்கள். அதில் நன்மை அடைவீர்.
உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். அஸ்தம்: திட்டமிட்ட வேலை நடக்கும். பெரிய மனிதர் உதவியால் வேலை முடியும். சித்திரை 1,2: உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். புதிய முயற்சியில் வெற்றி அடைவீர். வரவு அதிகரிக்கும்.
சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலையில் நெருக்கடி ஏற்படும். தேவையற்ற பிரச்னை வரும். சுவாதி: மனக்குழப்பம் தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் சங்கடங்களை சந்திப்பீர். இயந்திரப்பணியில் இருப்பவர்கள் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.
விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். வருவாயால் வளம் காண்பீர். நட்பு வட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். அனுஷம்: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். கேட்டை: உங்கள் செயலில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். நினைத்ததை சாதிப்பீர்.
அவிட்டம் 3,4: உழைப்பால் லாபம் காணும் நாள். எதிர்பார்ப்பு எளிதாக நடக்கும். பயணத்தால் லாபம் உண்டாகும். சதயம்: வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை முயற்சியை லாபமாக்கும்.
பூரட்டாதி 4: முயற்சி வெற்றியாகும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். வேலைகள் எளிதாக நடக்கும். உத்திரட்டாதி: செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். ரேவதி: உற்சாகமாக செயல்படுவீர். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி குறையும்.