சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததற்கான காரணங்களை ஆராய 19 குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்களில், 36 பேர் இடம் பெற்றனர். தமிழகம் முழுதும் பயணம் செய்து, தொகுதி வாரியாக, அக்குழுவினர் அறிக்கை தயாரித்தனர். மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் நடந்த கள ஆய்வு தொடர்பான அறிக்கை, மாவட்ட வாரியாக, ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகளில், தொகுதிக்கு சம்பந்தமே இல்லாதவர்களை, கூட்டணி கட்சியினர் நிறுத்தி உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு, தொகுதிகளை ஒதுக்கும்போது, அவர்களின் செல்வாக்கு மற்றும் வெற்றி வாய்ப்பை, அடிமட்ட அளவில் ஆராய்ந்து முடிவு எடுக்காமல் கோட்டை விட்டுள்ளோம்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
எம்எல்ஏக்களை கொள்முதல் செய்யும் தவெக அரசு!

இந்தியா • 23 minutes ago