மகாராஷ்டிராவில் பாஜவை சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரசை சேர்ந்த சுனேத்ரா பவார் துணை முதல்வர்களாகவும் உள்ளனர். உத்தவ் தாக்கரே தலைமையில் ஒருங்கிணைந்த சிவசேனா இரண்டாக உடைந்த போது, ஏக்நாத் ஷிண்டே பக்கம் பெரும்பாலான நிர்வாகிகள் திரண்டதால், கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஷிண்டே வசமானது. தற்போது சிவசேனோ யுபிடி என்ற பெயரில் இயங்கும் கட்சியை உத்தவ் தாக்கரே தலைமை ஏற்று நடத்தி வருகிறார். இதில், 9 லோக்சபா எம்பிக்கள், 20 எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போது, அவர்களில் 6 முதல் 7 எம்பிக்கள் கட்சியில் இருந்து விலகி தனி அணியாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியானது. அவர்கள் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்து மத்தியில் ஆளும் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளதாக ஷிண்டே ஆதரவு தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். #OperationTiger #MaharastraPolitics #ShivsenaUBT #Shivsena #Uddhav #BJP #NDA #MahaPolitics #SanjayRaut
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
சிங்கப்பெண் படையை வலுப்படுத்துங்கள்!
தமிழகம் • 53 minutes ago