கோவை மாநகராட்சியில் திமுக - காங்., கவுன்சிலர்கள் குடிமிப்பிடி சண்டை | DMK and Congress | CM Vijays Picture Issue கோவையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மன்ற வளாகத்தில் முதல்வர் விஜய் படம் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் தங்களது முன்னாள் முதல்வர்கள் காமராஜர் மற்றும் ஸ்டாலின் படங்களை வைக்கக்கோரி போரட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் மற்றும் திமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் ஒழிக கோஷம் போட்டனர். இதனால் மன்றக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா இரு தரப்பினையும் சமாதானப்படுத்தினார். அரசாணை நடைமுறைகளை எடுத்துக் கூறினார். விதிகளுக்கு உட்பட்டு முன்னாள் முதல்வர்கள் ஸ்டாலின் மற்றும் காமராஜர் படங்களை மன்ற வளாகத்திற்குள் வைக்கலாம் என தெரிவித்தார். அதை ஏற்று இரு தரப்பினரும் அமைதியாகினர். #DMK #Congress #Vijay #PoliticalClash #Councillors #Uproar #Slogan #DownWithDMK #DownWithCongress #FaceToFace #Politicians #Protests #PoliticalTensions #CivicIssues
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
சிங்கப்பெண் படையை வலுப்படுத்துங்கள்!

பேச்சு, பேட்டி, அறிக்கை • 17 minutes ago