சேலம் ஆத்துார் தாசில்தார் ஆபீஸ் உதவியாளரும் கைது / Bribe Case / V&AC Police / Women Surveyor Arrested / Attur / Salem சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே துலுக்கனூர் ஊராட்சியை சேர்ந்தவர் குமரேசன். இவர் தனது இடத்தை அளவீடு செய்து தனி பட்டா பெறுவதற்காக ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலக நில அளவையர் ஜீவிதாவை அணுகினார். அவர், நில அளவீடு செய்து தனிப்பட்டா பெற்றுத்தர 12,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத குமரேசன் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறினார். தொடர்ந்து போலீசார் ரசாயனம் தடவிய 12,000 லஞ்சப்பணத்தை ஜீவிதாவிடம், குமரேசன் கொடுத்தார். பணத்தை ஜீவிதா, அவரது உதவியாளர் கண்ணதாசன் பெற்றுக் கொண்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த போலீசார் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணை நடக்கிறது. லஞ்சம் வாங்கி சர்வேயர், உதவியாளர் சிக்கிய சம்பவம் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103
திருவள்ளூர் • 09-Jun-2026