வீடு வாடகைக்கு கொடுத்தவரையும் அலேக்காக தூக்கிய போலீசார் | Kengavalli | Secret gender testing scam; 3 arrested including 2 women சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என ஸ்கேன் செய்வதாக கெங்கவள்ளி அரசு ஆஸ்பிடல் தலைமை டாக்டர் நித்யாவுக்கு புகார் வந்தது. கெங்கவல்லி போலீசார் உதவியுடன் டாக்டர் நித்தியா தலைமையிலான மெடிக்கல் டீம் நடுலூர் முத்து மாரியம்மன் கோயில் பகுதியில் சோதனை செய்தனர். அந்த பகுதியில் ஒரு வீட்டில் கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் ஸ்கேன் செய்யும் மெஷின் மறைத்து வைத்து இருப்பதை கண்டறிந்தனர். அங்கிருந்த 2 பெண்களிடம் விசாரணை நடத்தியதில், வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி குணவதி புரோக்கராக செயல்பட்டு, சின்னசேலம் சிறுபாக்கத்தை சேர்ந்த சரவணன் மனைவி அம்சவேணி கர்ப்பணிகளுக்கு ஸ்கேன் செய்தது தெரியவந்தது. 2 பெண்கள், வீட்டு உரிமையாளர் ஜெயசூர்யா உட்பட 3பேரை கெங்கவல்லி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103