சட்டசபை தேர்தலுக்கு பின் முதல்முறையாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை பழனிசாமி வந்தார். தேர்தல் தோல்வி குறித்து, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும், அ.தி.மு.க., தோல்வி அடைய என்ன காரணம் என, நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு நிர்வாகிகள் சிலர், கடைசி ஒரு வாரத்தில், சமூக வலைதளங்கள், மீடியா வாயிலாக விஜய் முன்னணியில் சென்று விட்டார். அவரை நாம் குறைத்து மதிப்பிட்டு விட்டோம். கரூர் விவகாரத்தில், விஜய்க்கு ஆதரவாக, அ.தி.மு.க., நின்றது தவறு என, கருத்து தெரிவித்தனர்.
Ganesh NR20 hour(s) ago
30 வருடம் ஆனாலும் இவர் தலைவராக இருக்கும் வரை அதிமுக இங்கு ஆட்சிக்கு வரவே முடியாது...இது நிச்சயம்....
திருப்பரங்குன்றம் பிரச்னை திமுக தான் காரணம்! #Nirmalkumar #tnminister #Tirupparankunramissu

தமிழகம் • 40 minutes ago