விடுதலை சிறுத்தைகள் கட்சியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்கிய, மாவட்ட நிர்வாகிகளை, அக்கட்சி தலைவர் திருமாவளவன் கண்டித்துள்ளார். விசிகவில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. லோக்சபா தொகுதி வாரியாக மண்டல பொறுப்பாளர்கள்; சட்டசபை தொகுதி வாரியாக மாவட்டச் செயலர்கள் என நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒன்றியம் மற்றும் மற்ற பிரிவுகளின் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளும் நடக்கிறது. கட்சியில் பதவி பெற பலர் முயன்று வருகின்றனர். அதேநேரம், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே, கட்சியில் பல்வேறு பதவிகளை பெற்று வருகின்றனர். இதை கட்சி தலைவர் திருமாவளவன் கவனத்திற்கு, கட்சி நிர்வாகிகள் சிலர் எடுத்து சென்றுள்ளனர். இதனால், அதிருப்தி அடைந்த திருமாவளவன், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கண்டித்துள்ளார். விசிக நிர்வாகிகள் கூறியதாவது: விசிகவில் மாவட்டச் செயலர் பொறுப்பில் இருப்போர், மனைவி, அம்மா, தம்பி என, குடும்பத்தினருக்கு, கட்சியின் மற்ற பொறுப்புகளை பெற்று தருகின்றனர். இதை, திருமாவளவன் கவனத்திற்கு கொண்டு சென்றதும், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கண்டித்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
FIFA போஸ்டரில் "தல" மெஸ்ஸி!
அக்கம் பக்கம் • 54 minutes ago