அதிரடிக்கு பெயர் போன அதிபர் டிரம்புக்கும், கியூட் ரியாக்ஷனுக்கு பெயர் போன இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையே வெடித்த போர் சர்வதேச அளவில் பரபரப்பை எகிற வைத்துள்ளது. நம் பிரதமர் மோடி, டிரம்ப், மெலோனி உள்ளிட்ட உலகின் முக்கிய தலைவர்கள் சமீபத்தில் பிரான்சில் நடந்த ஜி7 மாநாட்டில் பங்கேற்றனர். இது தொடர்பாக இத்தாலி செய்தி நிறுவனத்துக்கு டிரம்ப் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, தன்னுடன் எப்படியாவது போட்டோ எடுக்க வேண்டும் என்று இத்தாலி பிரதமர் மெலோனி கெஞ்சியதாக அதிர்ச்சி கிளப்பினார். டிரம்ப் கூறியது: எனக்கு மெலோனியிடம் பேச வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும் பேசினேன். நான் பேசியதால் நிச்சயம் அவர் மகிழ்ச்சி அடைந்திருக்க கூடும். மெலோனிக்கு என்னுடன் எப்படியாவது போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசை. இதற்காக என்னிடம் வந்து கெஞ்சினார். உண்மையில், அவருடன் எனக்கு போட்டோ எடுக்க விருப்பம் இல்லை. ஆனால், அவர் கெஞ்சியது எனக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியது என்று டிரம்ப் கூறினார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த பெண் தலைவர். அவரது க்யூட் ரியாக்ஷன் உலக அளவில் பிரபலமானது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக இடைத்தேர்தலில் சீமான் போட்டி?
கடலூர் • 8 minutes ago