கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம் / Tenkasi / Kashi Vishwanathar Thirukalyana darshan தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு உலகம்மன் காசி விஸ்வநாதர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் படிக்கட்டு முதல் சுவாமி சன்னதி வரை 500 கிலோ வண்ணப் பூக்களால் அத்தப்பூக் கோலம் போட்டு பெண் பக்தர்கள் அசத்தினர். பரதநாட்டிய பயிற்சி பள்ளி மாணவிகளின் கண்கவர் நாட்டியாஞ்சலியும் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமி அம்பாள் காமதேனு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மாலை மாற்றுதல் வைபவமும், அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி அம்பாள் ரதம் வீதி உலா வந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தமிழகம் • 09-Jun-2026