டிஸ்க்: தென்காசி புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளர் கைது / bribe / municipality staff arrested / tenkasi தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வடுகப்பட்டி அருகே தெற்கு சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர் புளியங்குடி நகராட்சி பகுதியில் 800 சதுர அடியில் வீடு கட்டினார். புதிய வீட்டிற்கு சொத்து வரி கட்ட புளியங்குடி நகராட்சியில் விண்ணப்பித்தார். பரிசீலனை செய்த நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் சொத்து வரியை நிர்ணயம் செய்து நானே வரியை செலுத்தி ரசீது தருகிறேன் என்றார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ், தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கூறினார். போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாயை காளிராஜ், வருவாய் உதவியாளர் அகமது உமரை தனது வீட்டிற்கு வரவழைத்து கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பால் சுதர் தலைமையிலான போலீசார் அகமது உமரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

உலகம் • 09-Jun-2026