25 கிலோ மீட்டர் சுற்றளவில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு | Kanyakumari | Atrtukal Bhagavathy Amman Temple | Pongal Worship திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பெண்கள் குவிந்தனர். இந்தாண்டு பொங்கல் விழா கடந்த பிப்ரவரி 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை 4 ம் தேதி திருவிழா நிறைவு பெறும். காலை 9.45 மணிக்கு கோயில் தந்திரி கோயிலில் இருந்து தீபம் எடுத்து வந்து தலைமை பூசாரி முதலில் பண்டார அடுப்பில் பற்ற வைத்து பொங்கல் வழிபாடை துவங்கி வைத்தார். தொடர்ந்து அனைத்து அடுப்புகளிலும் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது. திருவனத்தபுரம் நகரப்பகுதி முழுவதுமாக லட்சகணக்கான பெண்கள் பொங்கல் வழிபாடு நடத்தியதால் விழா களைகட்டியது. இந்த பொங்கல் விழா 25 கிலோமீட்டர் சுற்றளவில் நடத்தப்படுகிறது. கடந்த 1997 ம் ஆண்டு 15 லட்சம் பெண்களும். 2009 ல் 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டு உலக சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றனர். ஆண்டு தோறும் பொங்கல் வழிபாடு அதிகரித்து வருவதால் இந்த சாதனையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு கேரளா அரசு இன்று விடுமுறை அறிவித்தது. இன்று மதியம் 2.15 மணிக்கு நிவேத்திய பூஜையுடன் பொங்கல் வழிபாடு நிறைவடைந்தது. குட்டி விமானம் மூலம் பொங்கல் வழிபாடுகளில் அர்ச்சனை பூக்கள் தூவப்பட்டது. கோயில் நிர்வாகம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பகதர்களுக்கு குடிநீர், உணவு வழங்கினர். சினிமா, சின்னதிரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். கோயிலின் முன்புறம் அமைக்க பட்டுள்ள பச்சை பந்தலில் தோற்றப்பாட்டு என அழைக்கப்படும் கண்ணகி பாட்டு நடைபெற்றது. இன்று சந்திரகிரகணம் என்பதால் பிற்பகல் 3 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் நடை திறக்கப்படும். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு பஸ் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 3000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

உலகம் • 09-Jun-2026