குழந்தைகளை தூக்க வில்லில் எடுத்து செல்லும் தூக்கக்காரர்களின் நமஸ்கார நிகழ்வு | Kanyakumari | Hook-swinging vow festival at the Badrakali Amman Temple கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் தூக்கத் திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி மீன பரணி நாளில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தவுடன் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட தூக்கக்காரர்கள், கைகளில் குழந்தைகளை ஏந்தி தூக்க வில்லில் கோயிலை வலம் வரும் நேர்ச்சை நடைபெறும். இதற்காக 10 நாட்களுக்கு மேலாக விரதமிருக்கும் தூக்கக்காரர்கள் கோயிலில் முட்டுக்குத்தி நமஸ்காரம் உள்ளிட்ட உடல் பயிற்சிகள் செய்து அம்மனை வழிபடுகின்றனர். தூக்க நாளன்று 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, 40 அடிக்கு மேல் உயர தூக்க வில்லில் ஏற்றி, கைகளில் சுமந்தபடி தூக்கக்காரர்கள் அம்மனை வலம் வருவார்கள். வரும் 22 ம் தேதி பங்குனி மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தூக்க நேர்ச்சை நடைபெறவுள்ளது. இந்தாண்டு முன் பதிவு செய்யப்பட்ட 1124 பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற நமஸ்கார நிகழ்ச்சியில் 1450 மேற்பட்ட தூக்க நேர்ச்சை காரர்கள் கோயிலை வலம் வந்து நமஸ்காரம் செய்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தமிழகம் • 09-Jun-2026