அனந்த சயனத்தில் அருள்பாலிக்கும் பெருமாள் உடலில் கதிர்கள் விழும் அதிசயம் | Thiruvattar | Devotees were mesmerized after witnessing sunlight rays inside the sanctum of Adikesava Perumal Temple திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பெருமாள் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பங்குனி மற்றும் புரட்டாசி மாதத்தில் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை மாலை வேளையில் பொன்னிற சூரிய கதிர்கள் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் பெருமாளின் உடலில் விழும் வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பங்குனி மாதம் 5.ம் நாளான நேற்று மாலை மறைய தொடங்கிய சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் சபா மண்டபம், உதயமார்த்தாண்ட மண்டப பகுதியைத் தாண்டி கருவறையில் பள்ளிகொண்ட பெருமாளின் திருமேனியில் விழுந்தது. இதை பார்த்த திரளான பக்தர்கள் பரவசமடைந்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

திருவள்ளூர் • 09-Jun-2026