ஓட்டுக்கு பணம், பரிசு பொருள் அள்ளிக்கொடுக்க திமுக திட்டம் | Rajapalayam | Hoarding of gift items; AIADMK and BJP protest ராஜபாளையம் பழைய பஸ்ஸ்டாண்டில் திமுக கவுன்சிலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யும் நோக்கத்தில் திமுக சின்னம் பொறித்த விளையாட்டு உபகரணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அதிமுக மற்றும் பாஜக வினர் பரிசு பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைத்தனர். அதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜவினர் கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

திருவள்ளூர் • 09-Jun-2026