மதுரை மாநகராட்சி சுறுசுறு விறுவிறு | Madurai Cleaning workers | Gold chain recover from dustpin | Appriciation மதுரை எஸ்.கொடிக்குளம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ வனராஜா. இவரது மனைவி ராணி இன்று காலை வீட்டை சுத்தம் செய்து போது மேஜையில் இருந்த மூன்று சவரன் தங்கச் செயின் குப்பையோடு சென்று விட்டது. அப்பகுதியில் தூய்மை பணியை மேற்கொள்ளும் பணியாளர் சுப்பம்மா வீட்டிலிருந்த குப்பைகளை சேகரித்தார். அப்போது தங்கச் செயின் காணாமல் போனதை உணர்ந்த ராணி, புதூர் சுகாதார மேற்பார்வையாளர் சரண்குமாரிடம் தகவல் கூறினார். நகை தொலைந்த தகவல் தூய்மைப் பணியாளரிடம் தெரிவிக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சுப்பம்மா குப்பைக்குளை கலைத்து தேடினார். குப்பை தொட்டியில் கிடந்த மூன்று சவரன் செயினை கண்டுபிடித்து அதிகாரிகள் வாயிலாக உரியவரிடம் ஒப்படைத்தார். நகை கிடைத்ததால் எஸ்ஐ குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சுப்பம்மாவின் நேர்மையை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து, இனிப்பு கொடுத்து, அன்பளிப்பு வழங்கினர். தூய்மைப் பணியாளர் செயலுக்கு மதுரை மாநகராட்சி அதிகாரிகளும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

அறிவியல் ஆயிரம் • 09-Jun-2026