‛தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி கோலாகல ஆரம்பம்| Dinamalar Vazhikatti 2026 | Higher Education Counseling | Thamukkam Ground | Madurai ப்ளஸ் 2வுக்கு பின் உயர் கல்வியில் எந்தப் படிப்புகளை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம் என பல்வேறு பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர், கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு கோலாகலமாகத் துவங்கியது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி துறைத்தலைவர் ஜூலியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அமிர்த விஷ்வ வித்யா பீடம் சுவாமி சிதானந்தமிர்த சைதன்யா , ஸ்ரீ சக்தி கல்வி நிறுவன துணைத் தலைவர் தீபன் தங்கவேலு, கற்பகம் பல்கலை டீன் அமுதா உடன் இருந்தனர். கல்வி நிறுவன அரங்குகளை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன முதல்வர் டேவிட் ரத்தினராஜ் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். Breath ப்ளஸ் 2 எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி, உறுதியான எதிர்காலத்திற்கான முழுமையான வழிகாட்டுதல் அளிக்கும், அனுபவம் வாய்ந்த கல்வி நிபுணர்களால் ஏராளமான ஆலோசனைகள் வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டும் பிரமாண்டமாய், புத்தம் புதிய சிந்தனைகளோடும், ஏஐயுகத்தில் கனவுகளை நனவாக்கும் வகையிலும் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறது இந்த அற்புதமான கல்வி நிகழ்ச்சி. இன்று துவங்கி மார்ச் 28 மற்றும் மார்ச் 29 வரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. ஏராளமான கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் கல்வி கண்காட்சியும் கருத்தரங்குகளும் நடக்கின்றன. கல்வி, வாழ்க்கை வழி காட்டுதலுக்கான இந்த நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கின்றன. மாலையில் கல்வி நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் கருத்தரங்கு நடைபெறும் . இன்று I.T computer science, AI, நுழைவுத் தேர்வு மற்றும் ஸ்காலர்ஷிப், Robotics and automation, marine catering குறித்து சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர் . தொடர்ந்து வரும் நாட்களில், அரசு வேலை வாய்ப்பு, நீட் தேர்வு விளக்கம், சட்டம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட கல்வி பிரிவுகளை குறித்து 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுவர் பேட்டி 1.கௌசல்யா பெற்றோர் 05:52-06:37 06:44-07:15 2.சுபா பெற்றோர் 07:44- 08:22 3.கோவிந்தராஜன் பெற்றோர் 08:32-09:21 09:30-09:47 Breath நிகழ்ச்சியின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கும் மாணவர்களுக்கு டேப்லெட், டேப், வாட்ச் பரிசாக வழங்கப்படும். 4.காளீஸ்வரி மாணவி 03:38-04:18 5.அருண் சஞ்ஜய் மாணவர் 04:24-04:45 6.ஜெயஸ்ரீ மாணவி 04:58-05:42 இந்நிகழ்ச்சி பவர்டு பை, கோவை ஸ்ரீராம கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம். இணைந்து வழங்குபவர்கள், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, பி.எஸ்.என்.ஏ., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, கோவை கே.எம்.சி.எச்., அண்ட் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், செட்டிநாடு அகாடமி ஆப் ரிசர்ச் அண்ட் எஜூகேஷன், சேலம் நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி , ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங். ஆடியோ பார்ட்னர் இன்போ பஸ். Card: with voice over வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க: 95667 77833 என்ற எண்ணிற்கு RGN என WhatsApp செய்யவும். அனுமதி இலவசம் நேரம்: காலை 10 மணி - மாலை 6.30 மணி
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தமிழகம் • 09-Jun-2026