ஐரோப்பிய நாடானா நார்வேயின் இளவரசி மெட்டே மேரிட் வயது 52. கடந்த 2018ல் இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு பெரும் பாதிப்பை எதிர்கொண்டார். அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்த மெட்டே மேரிட், ஒரு கட்டத்தில் மூச்சுவிடவே திணறினார். இதையடுத்து, அவருக்கு சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அவரின் நுரையீரல் திசுக்கள் தடித்ததால், அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்தனர். எனினும், சாதாரண பொதுமக்களில் ஒருவராக இளவரசியும் அந்நாட்டு மருத்துவமனையில் நுரையீரலுக்காக பதிந்து வைத்து காத்திருந்தார். கடந்த 5ம் தேதி நுரையீரல் தானம் பெறுவோர் பட்டியலில் இளவரசியின் பெரும் இடம் பெற்றது. ஒரு நாட்டின் இளவரசி உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்காக சாதாரண குடிமக்களோடு மக்களாக காத்திருப்போர் பட்டியலில் காத்திருந்தது, உலக தலைவர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பல நாடுகளில் அரசியல் தலைவர்கள், அரச குடும்பத்தினருக்கு எல்லோரை காட்டிலும் முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படும் நிலையில், நார்வே இளவரசிக்கான சிகிச்சை நடைமுறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
சிங்கப்பெண் படையை வலுப்படுத்துங்கள்!

பேச்சு, பேட்டி, அறிக்கை • 17 minutes ago