சென்னை ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளராக இருந்தவர் வேம்புலி. இவர் பரங்கிமலை பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண்ணுக்கு நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கினார். கடந்த திமுக ஆட்சி காலத்தில் மகளிர் உடற்பயிற்சி மைய பொறுப்பாளராக அந்த பெண் நியமிக்கப்பட்டார். சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு தவெக ஆட்சிக்கு வந்தது. இந்த நிலையில் அடிக்கடி உடற்பயிற்சி மையத்துக்கு சென்ற வேம்புலி, பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று அந்த பெண்ணை வற்புறுத்தி வந்தார். நள்ளிரவு நேரத்தில் அடிக்கடி பெண் வீட்டு கதவையும் தட்டினார். சம்பவத்தன்று நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தான். பெண் கூச்சலிட்டதால் அங்கிருந்து வேம்புலி தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பரங்கிமலை போலீசில் பெண் புகார் செய்தார். கணவனை இழந்த பெண்ணுக்கு தவெக நிர்வாகி வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அரசியல் களத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வி த லீடர்ஸ் அரசியல் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் தவெகவை கடுமையாக விளாசினர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மெஹபூபா முப்திக்கு என்ன ஆச்சு?

பேச்சு, பேட்டி, அறிக்கை • 17 minutes ago