கோவை உக்கடம் அருகே உள்ள புட்டுவிக்கி பகுதியில், சுத்திகரிக்கப்படாத பாதாள சாக்கடை நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கழிவுநீர் நொய்யல் ஆறு வழியாக கரூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் பல மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப்படுவதால் நீரின் தரம் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
புரோக்கர்கள் போலீசில்.. அமைச்சர் ஆனந்த் பகீர்!
திருப்பூர் • 9 minutes ago