மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் மிகப் பெரிய பதவிகளில் கோலோச்சி வரும் நிலையில், இன்னொரு சர்வதேச நிறுவனத்தின் சிஇஓ ஆக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர் குணால் ஷா (Kunal Shah) வயது 47. மகாராஷ்டிராவின் மும்பையில் வளர்ந்த இவர், சாதாரண குடும்ப பின்னணி கொண்டவர். பள்ளிப் படிப்பை முடித்ததும் இன்ஜினியரிங் படிக்க விரும்பிய இவருக்கு, குடும்ப நிதி நிலை ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து, மும்பையில் உள்ள ஒரு கல்லுாரியில் பி.ஏ.,பிலாசபி படித்து பட்டம் பெற்றார். இதையடுத்து, பணியாற்றிக் கொண்டே எம்பிஏ படிக்க முயன்ற இவரால், அதை தொடர்ந்து படித்து முடிக்கமுடியவில்லை. முதலாம் ஆண்டோடு எம்பிஏ படிப்பை கைவிட்டார். சைபர் கேப், ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றிய இவர், சொந்தமாக ஏதேனும் சாதிக்க எண்ணினார். 2010ல் ப்ரீ சார்ஜ் Free Charge எனும் டிஜிட்டல் பேமென்ட் மற்றும் ரீசார்ஜ் ஆப் வடிவமைத்து அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆனார். அந்த செயலிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பால், மிகக் குறுகிய காலத்தில் ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்றதுடன், இவரது முயற்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
'வாழும் காமராஜர்' காங். காட்டம்
இந்தியா • 20 minutes ago