கோவை, மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையில் பவானிசாகர் நீர் தேக்க பகுதி உள்ளது. இங்குள்ள மொக்கை மேடு, இச்சிபாலி, மயில் மொக்கை பகுதிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க நீர்வளத்துறை அனுமதி தந்துள்ளது. ஆனால் வண்டல் மண் எடுக்க வருகிறோம் என்கிற பெயரில் பல முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊருக்குள் நுழைக்கின்றன. அதுவே எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது என்கின்றனர் அங்குள்ள கிராம மக்கள். லிங்காபுரம், காந்தவயல் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் டூவீலரில் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளும் புழுதி படிந்து காணப்படுகின்றன. ஒரு வாரம் மூடப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது என வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
'வாழும் காமராஜர்' காங். காட்டம்
கோயம்புத்தூர் • 1 hour(S) ago