நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளராக, சிட்டிங் எம்.எல்.ஏ., தங்கமணி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த தொகுதியில், நான்காவது முறையாக போட்டியிடுகிறார். 2006 முதல் 2011 வரை திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், 2011, 2016, 2021 என, தொடர்ந்து மூன்று முறை குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் இருந்துள்ளார். 2011 முதல் 2021 வரை, பத்தாண்டு காலம் அமைச்சராக இருந்துள்ளார். அ.தி.மு.க.,வின் அமைப்பு செயலராகவும் மாவட்ட செயலராகவும் உள்ளார். தொகுதியில் தேர்தல் வேலைகளை துவங்கி உள்ள தங்கமணி, இந்த முறை கடுமையான போட்டியை சந்திக்கும் நிலையில் உள்ளார். கடந்த 2021 தேர்தலில், ஆனங்கூர் ரயில்வேகேட் குறுக்கே பாலம் கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்தார். அவர் வெற்றி பெற்றபோதும், ஆட்சி மாற்றம் காரணமாக அந்த திட்டம் ஆய்வோடு நின்றது. எனவே, அப்பகுதியில் அடிக்கடி நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தொகுதியில் சாயப்பட்டறைகள் அதிகம் உள்ளதால், 200 கோடி ரூபாயில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103