தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வு, நடந்து வருகிறது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், ஏழு பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. வேட்பாளர் தேர்வு தொடர்பாக, தேசிய அமைப்பு செயலர் பி.எல்.சந்தோஷ், சென்னையில் ஆலோசனை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தேசிய தலைமைக்கு அனுப்பப்பட்டது. அதில், கட்சி பணியில் முழுவீச்சில் ஈடுபட்டவர்களில், சிலர் பெயர் விடுபட்டுள்ளது. இதையடுத்து, பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள மூன்று பேரை தேர்வு செய்து, மீண்டும் புதிய பட்டியலை அனுப்ப, தமிழக பா.ஜ., தலைமைக்கு, அக்கட்சி தேசிய தலைமை உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, புதிய பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது, தமிழக பா.ஜ.,வில், 12 ஆண்டுகளாக அமைப்பு செயலராக இருந்த கேசவ விநாயகனுக்கு மாவட்டம், தொகுதி தோறும் உள்ள நிலவரம் தெரியும். அவரே விபரங்களை சேகரித்து விடுவார். அவர், பதவியில் இல்லாத நிலையில், ஒருங்கிணைப்பு இல்லாத ஏழு பேர் குழு அவ்வாறு செய்யவில்லை. அவர்களுக்கு வேண்டியவர்கள் பெயரை குறிப்பிட்டு பட்டியலை அனுப்பினர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தமிழகம் • 09-Jun-2026