கூட்ட நெரிசலில் சிக்கி தொழிலாளி பரிதாபம் | Election Boycott Meeting | worker dies after being trapped in crowd | Nellai திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து அருகே தாதனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது காவுமுத்து. குவாரி தொழிலாளி. விதிகள் மீது செயல்படும் கல் குவாரிகளை மூடக்கோரி தாதனூத்து கிராமத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஸ்பாட்டுக்கு வந்த வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் கருத்து தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலில் சிக்கிய காவுமுத்துவின் நெஞ்சில் கை வைத்து யாரே ஒருவர் தள்ளி விட்டார். இதனால் சுருண்டு கீழே விழுந்த காவுமுத்து நெஞ்சுவலியால் துடித்தார். அவரை உடனே நெல்லை அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். அங்கு அவர் காலை இறந்தார். தாழையூத்து போலீசார் விசாரிக்கின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி காவுமுத்து பரிதாபமாக பலியான துயரம் சோகத்தை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
அமித்ஷா மாஸ்டர் பிளான்!
தமிழகம் • 1 hour(S) ago