சுகாதார சீர்கேட்டால் முகம் சுளிக்கும் பொதுமக்கள் | Public facing health crisis demands action | Collector office | Thirunelveli நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகத்தில் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன. இங்கு அனைத்துத்துறை அலவலகங்களும் செயல்படுகின்றன. திங்கள் தோறும் மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர். கலெக்டர் அலுவலகத்தின் ஒவ்வொரு தளத்திலும் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இவை பராமரிப்பு இல்லாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் உள்ள டாய்லெட் கோப்பைகள் சேதம் அடைந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. சில டாய்லெட்டுகள் பராமரிப்பின்றி பழைய பொருட்களை போட்டு வைக்கும் குடோனாக ஊழியர்கள் மாற்றியுள்ளனர். மாற்றுத்திறனாளி சிறப்பு கழிவறைகளில் கதவுகள் சேதமடைந்துள்ளது. அதைப் பயன்படுத்துவோர் கயிறு கட்டி கதவை மூடி பயன்படுத்தும் அவல நிலை நீடிக்கிறது. இவற்றிற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல் கலெக்டர் அலுவலகத்தின் அனைத்து தளங்களிலும் பெருச்சாளிகள் தொல்லை அதிகரித்துள்ளது. மனு கொடுக்க வருவோரை விரட்டி விரட்டி கடிக்க வருகிறது. எலிகள், பெருச்சாளிகளுக்கு பயந்து மக்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். கலெக்டர் ஆபீசில் பூனை சைசுக்கு தென்படும் பெருச்சாளிகள் ஜாலியாக ராஜ்ஜியம் செய்கின்றன. கீழ் தளத்தின் ரிசப்ஷன் ஹாலில் மேல் பகுதியில் வயர் பொந்துகளில் எலிகள் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. ஆவணங்களை எலிகள், பெருச்சாளிகள் கடித்து சேதப்படுத்தி வருகிறது. பல ஆவணங்களை பெருச்சாளிகள் பொந்துக்குள் இழுத்து சென்று விட்டது. மக்களின் சுகாதாரத்தை பேணிக்காப்பது கலெக்டரின் கடமை. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை கண்டு பொதுமக்களை முகம் சுளிக்கின்றனர். கலெக்டர் ஆனந்த மோகன் கள ஆய்வு செய்து குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
அமித்ஷா மாஸ்டர் பிளான்!
தமிழகம் • 1 hour(S) ago