முதல்வர் ஜோசப் விஜய்க்கு குவியும் பாராட்டு | Tirunelveli | Nabs Accomplices in Sickle Attack Case | Special Police Team நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம், வாகைகுளம் ஆகிய இடங்களில் கடந்த மாதம் 28ம் தேதி பேனர் வைப்பதில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஒரு கும்பல் பைக்கில் சென்று கண்ணில் தென்பட்டோரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. அதே கும்பல் மறுநாள் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களை சரமாரியாக வெட்டி விட்டு ஓட்டம் பிடித்தது. செல்லும் வழியில் நெல்லை மாவட்டம் மானூர் பகுதியில் 2 பேரை வெட்டி விட்டு தலைமறைவாகினர். இக்கும்பலை கைது செய்ய நெல்லை போலீஸ் எஸ்பி பிரசன்னகுமார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்பைடையில் குற்றவாளிகளை தனிப்படையினர் தேடினர். டிரோன், மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை நெருங்கினர். இவ்வழக்கில் A1 குற்றவாளி ரவுடி ஐயப்பனை கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இவ்வழக்கில் இதுவரை 12 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த 6 ரவுடிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்றிரவு தனிப்படை போலீஸ் தேடுதல் வேட்டையில் பிரம்மதேசம் மதன் வயது 26, நந்து வயது 24, வேல்கார்த்திக் வயது 23, கோவில்குளம் இசக்கிராஜா வயது 25, நெல்லை மாவட்டம் சிறுக்கன்குறிச்சி பேச்சிமுத்து வயது 37, நெட்டூர் சண்முகநாதன் வயது 30, ஆகிய ரவுடிகளை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் நந்துவை தவிர மற்ற 5 பேரும் போலீசாரை தள்ளி விட்டு காட்டுப்பகுதியில் தப்பி ஓட முயன்றனர். அவர்கள் கீழே விழுந்ததில் கைகளில் முறிவு ஏற்பட்டது. 5 பேரையும் நெல்லை அரசு ஹாஸ்பிடலில் போலீசார் அட்மிட் செய்தனர். எலும்பு முறிவுக்கு சூப்பர் மாவுக்கட்டு போடப்பட்டது. தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய உத்தரவிட்ட முதல்வர் ஜோசப் விஜய், நெல்லை எஸ்பி., மற்றும் தனிப்படை போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
baala11-Jun-2026
மாக்கட்டு உண்மையா?
அமித்ஷா மாஸ்டர் பிளான்!
தமிழகம் • 1 hour(S) ago