சபாநாயகர் அப்பாவுக்கு பெண்கள் எதிர்ப்பு | Tirunelveli | Speaker Appavu chased away while seeking votes திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார். வள்ளியூர், பழவூர் அருகே அம்பலவாணபுரத்தில் அவர் ஓட்டு கேட்டு சென்றபோது, பெண்கள் அவரது வாகனத்தை மறித்து எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் பகுதிக்கு அரசு திட்டங்கள் எதுவும் வரவில்லை, எனவே நீங்கள் ஓட்டு கேட்டு வரக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதி முன்னாள் திமுக எம்பி ஞான திரவியத்தின் சொந்த ஊராகும். எனவே அப்பாவு அந்த ஊர் பிரமுகர் பாஸ்கரை அழைத்து எதிர்ப்பு தெரிவி்த்தவர்களை சமாதானப்படுத்தினார். மைக்கில் பதிலளித்த அப்பாவு,நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம். ஆனால் ஒரு வேட்பாளராக நான் இங்கு ஓட்டு கேட்க கூடாது என கூற முடியாது என ஆவேசமானார். நேற்று, கூட்டப்புளி சுனாமி காலனி மீனவர் குடியிருப்பு பகுதியில் அவர் ஓட்டு கேட்டு சென்றபோது, அங்கிருந்தவர்கள் எங்கள் கிராமத்திற்கு அரசு பஸ் இன்னும் வரல எப்போ வரும் என கேள்வி கேட்டு கூச்சலிட்டனர். இதற்கு பதிலளித்த அப்பாவு இந்த ஊருக்கு அரசு பஸ் இயக்க முடியாத நிலை உள்ளது. அதற்குப் பதிலாக மினி பஸ் ஏற்பாடு செய்யலாம் என தெரிவித்தார். அப்பாவு ஓட்டு சேகரிக்கச் செல்லும் இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
அமித்ஷா மாஸ்டர் பிளான்!
தமிழகம் • 1 hour(S) ago