பணம் கிடைக்காதவர்கள் கொதிப்பு | Money to Vote | DMK Candidates House Siege | Nellai தமிழக சட்டசபைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா ஜோராக நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியில் பரபரப்பான சம்பவம் இன்று நடந்தேறியது. பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல் வகாப் ஆதரவாளர்கள் சிலர், வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பாளையங்கோட்டை 7வது வார்டில் ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும், பலருக்கு பணம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கொதிப்படைந்த வாக்காளர்கள் இன்று காலை தெருக்களில் கூட்டமாக திரண்டனர். எங்களுக்கு பணம் வரவில்லை. ஒரு வேளை உடன் பிறப்புக்கள் எங்களுக்கு வர வேண்டிய 1000 ரூபாயை ஆட்டையை போட்டு விட்டார்களா என கேள்வி எழுப்பினர். பணம் ஏன் வழங்கவில்லை என விளக்கம் கேட்பதற்காக வேட்பாளர் அப்துல் வகாப் வீட்டை நோக்கி பெண்கள், ஆண்கள் என கூட்டம் கூட்டமாகப் படையெடுத்தனர். வேட்பாளர் அப்துல் வகாப் வீட்டை முற்றுகையிட்டனர். எனினும் வேட்பாளர் வீட்டில் இல்லை என உடன் பிறப்புக்கள் கூறினர். அதை ஏற்க மறுத்து மக்கள் முற்றுகையை தொடர்ந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
சிங்கப்பெண் படையை வலுப்படுத்துங்கள்!