வெள்ளிக் கண்ணு மீனா... வீதி வழி போனா... தைய தக்கா... தைய தக்கா... உய்யா | Taransgender beauty tournament | Pillaiyar Kuppam | Koothandavar Temple Festival | Puducheery புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் 200 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு சித்திரைத் திருவவிழாவின் ஒரு பகுதியாக திருநங்கைகளுக்கான அழகிக்போட்டி நேற்றிரவு நடந்தது. இதில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்து ஏராளமான திருநங்கைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பாரம்பரிய உடை, நவீன ஆடை மற்றும் நடனம் என 3 பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தங்களது திறனை வெளிபடுத்தினர். இறுதிப்போட்டியில் முதல் ஐந்து இடங்களில் வென்றவர்களுக்கு திருநங்கையர் சங்க நிர்வாகிகள் ஷீத்தல், கிரிஜா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கிரீடம் அணிவித்து பரிசு மற்றும் கேடயம் வழங்கினர். திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் மிஸ் பிள்ளையார்குப்பம் பட்டத்தை ரித்திகா தட்டி சென்றார். ருத்ரா, ஐஸ்வரியா, தீனா ஸ்ரீ, தன்ஷ்யா ஆகியோர் முதல் 5 இடங்களை பெற்றனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
அமித்ஷா மாஸ்டர் பிளான்!
தமிழகம் • 1 hour(S) ago