தினமலர் செய்தி எதிரொலி | Puducherry | Following a Dinamalar news report | MLA repairs the newly road at his own expense புதுச்சேரி டு விழுப்புரம் செல்லும் ரயில்வே பாதையில் வில்லியனூர்- பத்துக்கண்ணு ரோட்டின் குறுக்கே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதற்காக தண்டவாளம் அருகே உள்ள தார் சாலைகள் பெயர்க்கப்பட்டது. அங்கு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழ் கடந்த 11ம் தேதி செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக வில்லயனுார் தொகுதி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ரவிக்குமார் தனது சொந்த செலவில் சாலையை சீரமைத்துக் கொடுத்தார். இதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் பத்துக்கண்ணு ரோடு, சுல்தான் பேட்டை, வில்லியனூர் முத்துப்பிள்ளை பாளையம் ரயில்வே லெவல் கிராஸிங் ரோடுகள் சீரமைக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். சாலைப் பயணம் சுலபமானது. அரசை எதிர்பார்க்காமல் தனது சொந்த செலவில் தார் சாலை அமைத்துக் கொடுத்த எம்எல்ஏ ரவிக்குமாருக்கும், தினமலர் நாளிதழுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
அமித்ஷா மாஸ்டர் பிளான்!
தமிழகம் • 1 hour(S) ago