திரவியம் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடெமி மாணவர்கள் சாதனை | National Level Open Karate & Silambam Championship 2026 | Karaikal காரைக்காலில் ஓப்பன் நேஷனல் லெவல் கராத்தே மற்றும் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் நாடு முழுவதிலும் இருந்து நுாற்றுக்கணக்கான இளம் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். காரைக்கால் திரவியம் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடெமி மாணவர்கள் 30 பேர் பங்கேற்று சாதனை படைத்தனர். பயிற்சியாளர் திவாகர் தலைமையில் பயிற்சி பெற்ற இம்மாணவர்கள் 30 பேரும் போட்டியில் சிறப்பாக பங்கு பெற்று சாதனை படைத்தனர். இம்மாணவர்கள் கோல்ட் மற்றும் சில்வர் மெடல்களை வென்று அகாடெமிக்கு பெருமை சேர்த்தனர். குறிப்பாக 9 முதல் 10 வயதுக்கு உட்பட்ட சிலம்பம் ஒற்றைக்கம்புப் பிரிவு போட்டியில் பங்கேற்ற மதுரை டிவிஎஸ் பள்ளி மாணவன் பிரித்திக் முதல் பரிசாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இளம் சாதனை வீரர் பிரித்திக், திரவியம் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடெமி மற்றும் பயிற்சியாளர் திவாகருக்கு விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
அமித்ஷா மாஸ்டர் பிளான்!
தமிழகம் • 1 hour(S) ago