எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்து படிப்புகளில் சேர, தேசிய அளவில் நடத்தப்படும் நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். கடந்த மாதம் 3ம் தேதி நாடு முழுதும் நடந்த நீட் தேர்வில், 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பே, வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, தேசிய தேர்வு முகமை மற்றும் சிபிஐ விசாரித்ததில், வினாத்தாள் கசிந்தது உறுதியானது. இது தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சிபிஐ விசாரணை நடக்கிறது. ஆசிரியர்கள், தேர்வு எழுதிய மாணவர்கள், பயிற்சி நிறுவன நிர்வாகிகள் என பலரும் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர். வரும் 21ம் தேதி நீட் மறு தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெலிகிராம் செயலியில் நீட் தேர்வுக்கான வினாத் தாள் கிடைக்கும் எனக் கூறி சிலர் மாணவர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, டெலிகிராம் செயலியை முடக்க, தேசிய தேர்வு முகமையான எம்டிஏ, மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து, வரும் 22ம் தேதி வரை டெலிகிராம் செயலி பயன்பாட்டுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல், ஏற்கனவே அனுப்பிய மெசேஜ்களை, வரும் 30ம் தேதி வரை எடிட் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் செயலியில் உள்ளது போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் டெலிகிராம் செயலியில் இல்லை என்பதும், இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Ecuador & Columbia World Cup 2026 Underdogs