மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜ 208 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வென்றது. அக்கட்சித் தலைவரும், 3 முறை முதல்வராகவும் இருந்த மம்தா பானர்ஜி, பாவனிபூர் தொகுதியில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியிடம் 15,105 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மம்தாவை வீழ்த்திய பாஜ வேட்பாளர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க முதல்வரானார். தேர்தல் முடிவுகள் வெளியான போதே தோல்வியை ஏற்க மறுத்த மம்தா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் அடம்பிடித்தார். தேர்தல் தோல்வியால் திரிணாமுல் காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் 20 லோக்சபா எம்பிக்கள் வேறு கட்சியில் ஐக்கியமாகி என்டிஏ அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 3 ராஜ்யசபா எம்பிக்கள் ராஜினாமா செய்ததுடன், 60 எம்எல்ஏக்கள், மம்தாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். முந்தைய ஆட்சிகளின் நடந்த பல்வேறு ஊழல்கள் தொடர்பாக விசாரணை ஆணையங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளன. இத்தனை நெருக்கடிகளுக்கும் ஆளாகியுள்ள மம்தா, தற்போது பவானிபூர் தேர்தல் முடிவை எதிர்த்து கொல்த்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Ecuador & Columbia World Cup 2026 Underdogs