ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இருப்பதால், அவர் வகிக்கும் இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். லோதா கமிட்டி பரிந்துரைப்படி ஒரு நபர் இரண்டு பொறுப்புகளில் ஒரே நேரத்தில் நீடிப்பது தவறு. நிர்வாகத்தின் நடுநிலையை பாதிக்கும்; அது குற்றம் என அதிமுக எம்பி இன்பதுரை தெரிவித்திருந்தார். இதற்கு, மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச்செயலராக ஆதவ் அர்ஜுனா உள்ளார். அதே சங்கத்தில், நான் சீனியர் துணைத்தலைவராக உள்ளேன். ஆதவ் அர்ஜுனா தமிழ்நாடு கூடைப்பந்து கழகத் தலைவராகவும் உள்ளார். ஒரு விளையாட்டு வீரரை அதிமுக விமர்சனம் செய்தது என்னை பாதித்தது. விளையாட்டு வீரர் தாண்டிவந்த பாதை எவ்வளவு கடினமானது என, என்னை போன்ற ஒரு வீரருக்குத் தான் தெரியும். அதை தெரிந்து, அவரை விளையாட்டு துறைக்கே அமைச்சராக்கிய முதல்வர் விஜயை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

இந்தியா • 3 minutes ago

தமிழகம் • 8 minutes ago
விருதுநகர் • 10 minutes ago
தேனி • 10 minutes ago
கோயம்புத்தூர் • 10 minutes ago
செங்கல்பட்டு • 10 minutes ago
சென்னை • 10 minutes ago
செங்கல்பட்டு • 10 minutes ago