முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு தொடருமா, கைவிடுமா என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தமிழ் இலக்கிய பங்களிப்பை போற்றும் வகையில், பொதுப்பணித் துறை சார்பில், 80 கோடி ரூபாயில், 8,000 சதுர மீட்டர் பரப்பில், 30 மீட்டர் உயரம், 3 மீட்டர் விட்டமும் கொண்ட பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும். இதற்காக, சென்னை மெரினா கடற்கரையில் இருந்து தரை பரப்பில் 290 மீட்டர், கடலில் 360 மீட்டர் நீளத்தில் பாலம் அமைக்கப்படும் என கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆமைகள் முட்டையிடும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதிக்குள் வருவதால், பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடை கோரி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், நாம் தமிழர் கட்சியின் வெண்ணிலா தாயுமானவன் ஆகியோர், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: கருணாநிதி பேனா நினைவுச் சின்ன திட்டத்தை, தமிழக அரசு முன்னெடுக்கப் போகிறதா அல்லது கைவிடுகிறதா என்பதை தெரிவிக்க வேண்டும். இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளாகியும் எந்த கட்டுமானமும் நடக்கவில்லை.
Chess Player9 hour(s) ago
13 லக்ஷம் கோடி கடன், இதுல பேணா வெக்கறேன், பேப்பர் வைக்கிறேன்னு வ்வ்ர். ஸ்டாலின் சொந்த மா நிலம் வாங்கி சொந்த காசுல வைக்கச்சொல்லுங்க ,
புரோக்கர்கள் போலீசில்.. அமைச்சர் ஆனந்த் பகீர்!
திருப்பூர் • 6 minutes ago