ோவை ராமநாதபுரத்தில் தனியார் அப்பார்ட்மென்ட் ஒன்று உள்ளது. இங்கு 100க்கும் அதிகமான தனி மற்றும் அடுக்குமாடி வீடுகள் உள்ளன. ஒரு தனி வீட்டில் வசித்து வந்தவர் கஸ்துாரி வயது 80, கணவர் இறந்து விட்டார். ராம்குமார் என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர். ஆயுர்வேத டாக்டரான ராம்குமார் சில மாதங்களுக்கு முன் வியட்நாம் சென்றார். தாயை கவனிக்க நேபாளத்தை சேர்ந்த சுர்ஜா ரோக்யாவை வேலைக்கு வைத்தார். கோவை டி.வி.எஸ்., நகரில் வசிக்கும் ஒரு மகள் நேற்று காலை கஸ்துாரிக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு தகவல் சொன்னார். அவர் போய் பார்த்த போது அதிர்ச்சி காத்து இருந்தது. பெட்ரூமில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து அடைத்து கஸ்துாரி சடலமாக கிடந்தார். கஸ்துாரி மகளிடம் அந்த பெண் சம்பவத்தை கூறினார். #CoimbatoreApartment | #KovaiPolice | #Commissioner | #kovaiOldLady | #KovaiCaseupdate
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

உலகம் • 09-Jun-2026