திருப்பூர் வீராங்கனைக்கு தடபுடல் வரவேற்பு| International Ball Badminton| India wins Gold மலேசியாவில் பிப்ரவரி 27ம் தேதி முதல் சர்வதேச தெற்கு ஆசிய போட்டி நடைபெற்றது. பால் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பாக திருப்பூரை சேர்ந்த 21 வயது இளம் வீராங்கனை நந்தினி பங்கேற்றார். பல சுற்றுகளை கடந்து இறுதிப் போட்டியில் நந்தினி முதலிடம் வென்று அசத்தினார். தங்க பதக்கத்துடன் சொந்த ஊர் திரும்பிய வீராங்கனைக்கு தடபுடல் வரவேற்பு கொடுக்கப்பட்டது. நந்தினியின் தந்தை திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். 14 வயது முதல் நந்தினிக்கு பால் பேட்மிண்டன் போட்டிக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் தங்க மகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

உலகம் • 09-Jun-2026