தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் நாளை பிரசாரத்தை துவக்க திட்டமிட்டார். போலீசிடம் அனுமதி கேட்கப்பட்டது. போலீசார் அனுமதி அளிக்கவில்லை. பெரம்பூரின் எம்கேபி நகரில் 3000 பேர் கூட முடியாது; சிறிய இடம் என்பதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனக்கூறி விஜய் கோரிக்கையை போலீசார் நிராகரித்தனர். இதை கண்டித்த விஜய், தவெக பிரசாரத்துக்கு போலீசும், அதிகாரிகளும் சேர்ந்து முட்டுக்கட்டை போடுகின்றனர். இது, ஜனநாயகம் மீதான பாசிசத் தாக்குதல் எனக்கூறியுள்ளார். பெரம்பூரில் நிகழ்ச்சிக்கு 2 நாட்களுக்கு முன்பே முல்லை நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டோம். ஆனால், பிரசாரத்துக்கு 1 நாள் முன்னதாக, சென்னை மாநகராட்சி எம்கேபி நகரில் திடீரென பள்ளம் தோண்டி இரும்பு தடுப்புகள் வைத்துள்ளது. #Tvk #ActorVijay #VijayCondemn #PermissionDenied #VijayCampaign #VijayElectionCampaign #Election2026 #CampaignIssues #PoliticalDebate #VoteVijay #ElectionStrategy #DemocracyInAction #PoliticalVoices #VijayForChange #EmpowerTheVoter #CampaignTrail #CitizensRights #VoicesForVijay #CampaignPayback #VoteResponsibly #EngageAndVote #FutureOfPolitics
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தகவல் சுரங்கம் • 09-Jun-2026