கோலிடிஸ் அண்ட் க்ரோன்ஸ் ஆப் இந்தியா அமைப்பு சார்பில், குடல் அழற்சி நோய்க்கான, பிரத்யேக கிளை தமிழகத்தில் வரும் 29ம் தேதி துவங்கப்பட உள்ளது. குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களது குடும்பத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது; ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து மருத்துவ வசதிகள் வழங்குவது இதன் நோக்கம். குடல் அழற்சி நோய் என்பது ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை தர வேண்டிய ஒரு தீவிரமான நாள்பட்ட நோய். இந்தியாவில் குறிப்பாக நகரங்களில் இந்த நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழக கிளை முக்கிய பங்கு வசிக்கும் என அதன் ஒருங்கிணைப்பாளரும், அப்போலோ மருத்துவமனை குடல் நோய் துறை தலைவருமான டாக்டர் கே.ஆர் பழனிசாமி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

திருவள்ளூர் • 09-Jun-2026