அமெரிக்கா, இலங்கையில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு | Kundrathur | National chess tournament | Sports Meet காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் கோவூர் ஸ்ரீ க்ரிஷ் இன்டர்நேஷனல் பள்ளியில் தேசிய செஸ் போட்டி நடைபெற்றது. கடந்த 4ம் தேதி தொடங்கிய போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் மற்றும் அமெரிக்கா, இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீ க்ரிஷ் இண்டர்நேஷனல் பள்ளித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். போட்டியை கிராண்ட் மாஸ்டர் சுந்தராஜன் கிதம்பி, கிராண்ட் மாஸ்டர் செந்தில் மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் 5 வயது சிறுவர் முதல் 60 வயது முதியவர் வரை பங்கேற்றனர். வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க விளையாட்டுச் சங்கத் தலைவர் அப்துல் ஹமீது, செயலாளர் ஜோதி பிரகாசம் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர். முதல் பரிசு 1 லட்சம் ரூபாய், 2 ம் பரிசு 75 ஆயிரம் ரூபாய் என 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மெஹபூபா முப்திக்கு என்ன ஆச்சு?
தமிழகம் • 56 minutes ago