இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 2.30 மணி வரை மக்கள் அவதி | Chennai | Power outage in Kolathur | public road blockade protest சென்னையில் முக்கிய பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் தொடர் மின் தடை ஏற்படுகிறது. நேற்றிரவு கொளத்தூர் ராஜமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் 200 அடி ரோடு, புழல் கடப்பா பகுதி மற்றும் ரேவதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நள்ளிரவு 2 மணிக்கு செந்தில் நகர் போலீஸ் பூத் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர். மறியலால் போக்குவரத்து தடைப்பட்டது. ராஜமங்கலம் போலீசார் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தடையில்லா மி்ன்சாரம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் கூறினர். ஸ்பாட்டுக்கு விரைந்த மின் ஊழியர்கள் மின் பிரச்சனையை சரி செய்ததை தொடர்ந்து நள்ளிரவு 2:30 மணிக்கு மறியலை மக்கள் கை விட்டனர். மதுரவாயல்: மின் அலுவலகம் முற்றுகை மதுரவாயல் எம்எம்டி காலனி 4 மற்றும் 5வது பிளாக், அபிராமி நகர், கந்தசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு 9:30 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மக்கள் மதுரவாயல் மின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாலை வரை மக்கள் மின் தடையால் தவித்தனர். காலை 6 மணிக்கு மேல் மின் வினியோகம் சீரானது. தடையில்லா மின் வினியோகம் வழங்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மெஹபூபா முப்திக்கு என்ன ஆச்சு?
தமிழகம் • 56 minutes ago