சென்னையில் இன்று அதிகாலை துயர சம்பவம் | Chennai | Cylinder Blasts Apart | Horror During Film Shoot இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா கில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஓட்டேரி பகுதியில் உள்ள பி & சி மில் வளாகத்தில் சூட்டிங் நடக்கிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இன்று அதிகாலை 3.30 மணியளவில் சூட்டிங் நடைபெற்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த கேஸ் பலூன் சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் தொழில்நுட்ப கலைஞர் மதுரவாயலைச் சேர்ந்த மதன் வயது 26, ஸ்பாட்டிலேயே உயிரிழந்தார். குன்றத்தூரைச் சேர்ந்த சக்திவேல் வயது 27, மதுரவாயலைச் சேர்ந்த சூர்யா வயது 23, நெற்குன்றத்தைச் சேர்ந்த தினகரன் வயது 24 ஆகியோர் படுகாயமடைந்தனர். சக ஊழியர்கள் மூவரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மெஹபூபா முப்திக்கு என்ன ஆச்சு?
தமிழகம் • 56 minutes ago