6 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா படைப்பாளி பாரதிராஜா| Chennai | Director Bharathiraja Passes Away தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டரான பாரதிராஜா வயது 84 உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக அவரது இல்லத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்த நிலையில், கடந்த 2025 ல் அவரது மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு பின் பாரதிராஜா மிகுந்த மன வேதனையில் இருந்தார். 1977 ம் ஆண்டு வெளியான 16 வயது திரைப்படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார். கிராமியப் பின்னணியில் பல வெற்றி படங்களை உருவாக்கியவர் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு தனி பாணியை உருவாக்கிய இயக்குனர் சிற்பி. நடிகைகள் ராதிகா, ராதா மற்றும் நடிகர்கள் நெப்போலியன், பாண்டியன், கார்த்திக் உள்ளிட்ட பலரை திரை உலகில் அறிமுகம் செய்து வைத்தவர். அவர் இயக்கிய முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், கடலோரக் கவிதைகள், புதிய வார்ப்புகள், கருத்தம்மா, கல்லுக்குள் ஈரம், மண்வாசனை, காதல் ஓவியம், வேதம் புதிது உள்ளிட்ட பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளாக பேசப்பட்டன. கடைசியாக அவர் இயக்கி நடித்த மீண்டும் ஒரு மரியாதை திரைப்படம் அவரது கடைசி படமானது. 6 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமாவின் படைப்பாளி பாரதிராஜா. 2004ம் ஆண்டு பாரதிராஜாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. டைரக்டராக மட்டுமல்லாமல் நடிகராகவும் முத்திரை பதித்தார். தமிழ் திரை உலகின் இயக்குனர் இமயம் என போற்றப்படும் பாரதிராஜாவின் மறைவு திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், சீமான், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மெஹபூபா முப்திக்கு என்ன ஆச்சு?
தமிழகம் • 56 minutes ago