பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி கல்வியாளர்கள் விளக்கம் | Chennai | Dinamalar Guidance Program | Engineering Dreams into Reality தினமலர் நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி, பூந்தமல்லி குத்தம்பாக்கம் ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில் நடைபெற்றது. பிளஸ் 2 முடித்து விட்டு, பிஇ, பிடெக் ஆகிய இன்ஜினியரிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் டிஎன்இஏ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வு அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள இளநிலை படிப்புகளுக்கான இடங்கள், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை கலந்தாய்வின் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இணையவழி கலந்தாய்வு அணுகுமுறைகள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் முறை, எந்த கல்லுாரியில் என்ன கட் ஆப் மதிப்பெண்ணுக்கு, எந்த பாடப்பிரிவு கிடைக்கும் என்பது தொடர்பாக, மாணவர்களுக்கு பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் உள்ளன. இந்நிலையில், அண்ணா பல்கலையின் ஆன்லைன் கவுன்சிலிங் குறித்து மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தினமலர் நாளிதழ் சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாணவர்களின் வெவ்வேறு கட் -ஆப் மதிப்பெண்களுக்கு எந்தெந்த கல்லுாரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆன்லைன் கவுன்சிலிங்கின் போது சாய்ஸ் பில்லிங் எனும் கல்லுாரிகள், பாடப்பிரிவுகளை எவ்வாறு தேர்வு செய்வது, புரொவிஷனல் அலாட்மென்ட் பெறுவது எப்படி, வேலைவாய்ப்பு அதிகம் உள்ள சிறந்த இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் எவை, சிறந்த உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு வசதிகள் உள்ள கல்லுாரிகளை எவ்வாறு கண்டறிவது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். இந்தாண்டு கவுன்சிலிங்கில் அரசு செய்துள்ள மாற்றங்கள் குறித்தும், கல்வி ஆலோசகர்கள் ஜெயபிரகாஷ் காந்தி, அண்ணா பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
சிங்கப்பெண் படையை வலுப்படுத்துங்கள்!
தமிழகம் • 55 minutes ago