நெல்லை ஊழல் தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Govt loses ₹1.20 crore | Anti-corruption court delivers a bold verdict | Thirunelveli திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2011 முதல் 2016 வரை களக்காடு பேரூராட்சியாக இருந்தபோது தி.மு.க.,வை சேர்ந்த பி.சி.ராஜன் தலைவராக இருந்தார். அப்போது செயல் அலுவலர் முத்துக்குமாருடன் இணைந்து, தனியார் ஒருவருக்கு 74 ஏக்கர் நிலத்தில் பிளாட் அமைக்க பல கோடி வாங்கி கொண்டு அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கை விசாரித்த திருநெல்வேலி ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சுப்பையா, பி.சி.ராஜன் மற்றும் முத்துக்குமார் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை, தலா 31 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பி.சி.ராஜன் தற்போது களக்காடு தி.மு.க. ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. முத்துக்குமார் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தமிழகம் • 9 minutes ago
திண்டுக்கல் • 11 minutes ago
கோயம்புத்தூர் • 11 minutes ago
கோயம்புத்தூர் • 11 minutes ago
திருப்பூர் • 19 minutes ago
கோயம்புத்தூர் • 19 minutes ago
காஞ்சிபுரம் • 19 minutes ago
இந்தியா • 19 minutes ago