தனியார் துறைமுகங்களிலும் தீவிர சோதனை | Karaikal | Boat inspections in mid-sea; Election Commission on red alert புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள் கடத்தப்படுகிறதா என நாகப்பட்டினம், காரைக்கால் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதியான நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மதுபானங்கள் கடல் வழியாக கடத்தப்படுவதை தடுக்க காரைக்கால் கடலோர போலீசார் கடலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வடக்கு மண்டல எஸ்பி பழனிவேல், பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி டேனியல் ராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால் படகில் ஆழ்கடலில் 21 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். நடுக்கடலில் வந்த படகுகளை போலீசார் சோதனை செய்தனர். இதே போல் காரைக்கால் தனியார் துறைமுகத்திலும் சந்தேகத்திற்கு உட்பட்ட கப்பல்கள் வந்துள்ளதா என சோதனை செய்தனர். காரைக்காலில் உள்ள மீனவர் கிராம பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை செய்தனர். கடலில் தொலைதூரத்தில் எதுவும் கடத்தப்படுகிறதா என பைனாகுலர் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். ஒலி பெருக்கி மூலம் கடலில் சந்தேகப்படும் படகுகளை வரவழைத்து சோதனையில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தமிழகம் • 09-Jun-2026