விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பணியாற்றி வரும், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலர்கள், தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, கட்சி தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். இது, அமைச்சர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், தவெக சார்பில், 30 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ் சார்பில் இருவர், விசிக மற்றும் ஐயூஎம்எல் சார்பில், தலா ஒருவர் அமைச்சர் பதவி வகிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், விஜயுடன் ஆரம்ப காலத்தில் இருந்து, அவரது மக்கள் இயக்கத்தில் பணியாற்றி, தற்போது தவெக மாவட்ட செயலர்களாக உள்ளவர்கள், அமைச்சர் பதவி கேட்டு, கட்சி தலைமைக்கு, நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தவெக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து உழைத்தவர்களுக்குதான் பதவி என உத்தரவாதம் கொடுத்து, தவெக துவங்கப்பட்டது. ஆனால் 60 சதவீத கட்சிப்பதவிகள் தான், மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ராமநாதபுரம் • 10 minutes ago

இந்தியா • 39 minutes ago
சென்னை • 40 minutes ago

தமிழகம் • 1 hour(S) ago
மத்திய அரசு மீது பழிபோடும் வைகோ